தெய்வீகத்தைப் பற்றிய அறிவுக் கண்ணை மனித குலத்திற்கு திறக்கக் கூடியது.


வரவேற்கிறோம்

உண்மையான தெய்வீகம்

தெய்வங்கள் குறித்து, அறிவியல் அடிப்படையிலான தெளிவு இல்லாமல், மக்கள் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் தெய்வங்களை வணங்குகிறார்கள். ‘உண்மையான தெய்வீகம்’ என்ற இந்த நூல், பல வகைப்பட்ட வழிபாடுகளின் பின்னணியில் உள்ள அணுத்துகள்களின் சக்தி தாக்கங்கள் குறித்து அறிவியல் ரீதியான விளக்கங்களை அளிக்கிறது. மக்கள் தங்களது பல்வேறு வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமல்லாமல், மறுமை வாழ்வில் முக்தி நிலை (மோட்ச நிலை அல்லது அழிவற்ற நிலை) அடைய வேண்டும் என்ற முக்கிய பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளவும் தெய்வங்களை வணங்கி வருகின்றனர்.

முக்தி நிலை என்பது, அழிவற்ற ஆத்ம நிலை அல்லது தெய்வீக ஆத்ம நிலை அல்லது மனிதனாக மீண்டும் பிறப்பதை தவிர்க்கும் நிலை என்று பொருள் கொள்ளலாம். மனிதர்கள் (மனித ஆத்மாக்கள்) எப்படி தெய்வமாக முடியும் (அழிவற்ற மனித ஆத்மாக்களாக) என்பதை இந்நூல் விளக்குகிறது. மரணத்திற்கு பின்னர், தங்களது ஆத்மாக்கள், தாங்கள் வணங்கும் தெய்வங்களோடு ஒன்றர கலந்து விடுகின்றன என்றும், தாங்கள் செய்துள்ள நல்ல/ கெட்ட செயல்களுக்கேற்ப, தெய்வங்கள் தங்களுக்கு சொர்க்கம் அல்லது நரகத்தில் இடம் கொடுக்கின்றன என்றும் மக்கள் நம்புகின்றனர். மனித ஆத்மாக்கள், மறுமை வாழ்வு, தெய்வங்கள் ஆகியவற்றை பக்தர்கள் நம்புகின்றனர். வேறுசிலர், தூசியிலிருந்து மனிதனாக உருவாகி பிறகு, மீண்டும் அதே தூசியாக சிதறும் தத்துவத்தை நம்புகின்றனர். ஆனால் இரண்டுமே சாத்தியம்தான்.

மனித ஆத்மா, கண்ணுக்கு தெரியாத மனித உருவில், சக்தி வடிவமாக உருவாக்கம் பெறுகிறது. இதில், மக்களுக்கு நம்பிக்கை, இருக்கிறதோ, இல்லையோ, மனித ஆத்ம உருவாக்கம் என்பது ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பின்னரும் தன்னிச்சையாக நடைபெறும் ஒரு செயலாகும். இது குறித்து, இந்நூலில் அறிவியல்ரீதியாக விளக்கப்பட்டுள்ளது. அப்படி உருவாகும் மனித ஆத்மா, மறுமை வாழ்வில், அழிவற்ற மனித ஆத்மாவாக நீடித்திருக்குமா? அல்லது தூசியிலிருந்து தோன்றி, தூசியாக மறையும் தத்துவத்தின்படி, அப்படியே சிதறிவிடுமா? என்பதுதான் தற்போதுள்ள கேள்வி.

ஆத்மா என்பது என்ன? அது எதனால் உருவாகியுள்ளது? மரணத்திற்கு பின்னர் ஆத்மாவுக்கு என்ன ஆகிறது? அது எங்கே போகிறது? என்பது குறித்தெல்லாம் இதுவரையில், எந்த தொன்மையான நூல்களோ அல்லது ஆத்மா குறித்து வெளிவந்துள்ள புத்தகங்களோ அறிவியல் ரீதியான விளக்கங்களை கொடுக்கவில்லை. சாதாரண மனிதர்களின் ஆத்மாக்கள் மற்றும் அவர்களது கண்ணுக்கு தெரியாத ஆத்ம சக்தி என்பது, அவர்களது மரணத்திற்கு பின்னர், பொதுவாக 6-12 மாதங்களுக்குள் சிதறிவிடுகின்றன. ஆத்ம சக்திகள், முழுவதும் சிதறும் வரையில், அவை உயிரோடு இருந்தபோது வாழ்ந்த வீடுகள், மயானங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் சுற்றி வந்து கொண்டிக்கும். உருக்குலைந்த நிலையில் உள்ள அந்த ஆத்மாக்கள்தான் பேய்கள் என்று அழைக்கப்படுகின்றன. சில மனித ஆத்மாக்கள், அப்படி உருக்குலைந்துவிடாமல், கண்ணுக்கு தெரியாத மனித உருவிலான சக்தி ரூபத்தில் உறுதியாக இருக்கும். கோவில்களில் வசிக்கும் அழிவற்ற மனித ஆத்மாக்கள் அல்லது சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படும் அவைதான், தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. பக்தர்கள், தங்களுக்கும், அழிவற்ற நிலை வேண்டுமென வேண்டி, அத்தகைய தெய்வீக ஆத்மாக்களுக்கு, பல்வேறு சடங்குகளை செய்கின்றனர். ஆகவே, தெய்வங்கள் அல்லது அழிவற்ற ஆத்மாக்கள், வானத்தில் எங்கோ வசிப்பதில்லை. அவர்களும் இந்த பூமியில்தான் வசிக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆத்மா, மறுமை வாழ்வில், எப்படி சிதறிவிடாமல் உறுதியாக ஆத்ம சக்தி ரூபத்தில் நிலைத்திருப்பது? ஒரு மனித ஆத்மா எப்படி தெய்வீக ஆத்மாவாக மாறுவது? என்பதெல்லாம் மகத்தான தெய்வீக இரகசியங்களாகும். அவை குறித்துதான், ஸ்ரீசக்ர ஞானேஸ்வர். உண்மையான தெய்வீகம் என்ற இந்நூலில், அரிய விளக்கங்களை அளித்துள்ளார். சில மனிதர்கள், அழிவற்ற மனித ஆத்மாக்களை தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். வேறு சிலர், அணுத்துகள் சக்திகளையே (பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் பரவியுள்ள அணுக்கள்), தெய்வங்களாக கருதி வணங்குகின்றனர். நமது சுற்றுப்புறத்திலுள்ள அணுத்துகள் சக்திகளை பயன்படுத்தி எப்படி நமது திறன்களை மேம்படுத்தி கொள்வது? அதன் மூலம் எப்படி நமது மனித வாழ்வு மற்றும் மறுமை வாழ்வை மேம்படுத்தி கொள்வது? என்பது குறித்தும் இந்நூல் விளக்குகிறது.

மரணத்திற்கு பின்னர் நமது ஆத்மாவின் பயணம் குறித்து மக்கள் பல்வேறுவிதமான நம்பிக்கைகளை வளர்த்து கொண்டுள்ளனர். வானத்தில். சொர்க்கம் உள்ளது, நரகம், பாதாள உலகத்தில் இருக்கிறது போன்ற நம்பிக்கைகள் அவை. ஆனால், உண்மையில், மரணத்திற்கு பின்னர், மனித ஆத்மாக்களுக்கு என்ன நடக்கிறது என்பது முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. ஒரு மனித ஆத்மாவிற்கு, வழிபாட்டுத்தலத்தில் வசிக்க இடம் கிடைக்கிறது என்றால் அதுதான், அதற்கு மறுமை வாழ்வின் சொர்க்கம். அதேபோல, ஒரு மனித ஆத்மா, வசிப்பதற்கு இடமில்லாமல், மயானம், தெருக்கள் என்று சுற்றிக் கொண்டிருக்குமானால், அதுதான் அதற்கு மறுமை வாழ்வின் நரகம். ஒருவர் இறந்த பிறகு, அவரது இறந்த உடலிலிருந்து மனித ஆத்மா உருவாவது என்பது, அனைவருக்கும் ஏற்படும் தன்னிச்சையான நடைமுறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது தொன்மையான நூல்கள், ஆத்மா (அதாவது மனித ஆத்மா), மைக்ரோமீட்டர் அளவுதான் இருக்கும் என்று கூறுகின்றன. கருவை உருவாக்கும், விந்தணு மற்றும் கருமுட்டை ஆகியவற்றின் அளவை அடிப்படையாக கொண்டுதான், ஆத்மாவின் அளவு கற்பனை செய்யப்படுகிறது. கருவிலுள்ள அணுக்கள், குழந்தையாகவும், மனிதனாகவும் வளர்வதைப் போல, மனித உடலும், கோடிக்கணக்கான அணுக்களை கொண்டுள்ளது. மனித உடலின் ஆத்மன் அல்லது ஆத்மா என்பது, விந்தணு அல்லது கருமுட்டையில் இருந்ததைப்போன்று, ஒரு செல்லிலுள்ள உயிர் சக்தியல்ல. உடலிலுள்ள ஆத்மன் அல்லது ஆத்மாவின் (அனைத்து உயிரணுக்களிலும் உள்ள உயிர் சக்திகள்) அளவு என்பது வளரும்தன்மையுடையது. அவை ஒரு மனிதனின் உடல் முழுவதும் பரவியுள்ளது. அதேபோல, ஒரு விலங்கினம் அல்லது பறவையின் ஆத்ம சக்தியும், கருமுட்டையாக இருக்கும்போது மைக்ரோமீட்டர் அளவுதான் இருக்கும். அவற்றிலுள்ள ஆத்ம சக்தியின் வளர்ச்சி என்பது, உடலிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவினை பொறுத்தே அமைந்திருக்கும்.

ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் உயிரணுக்களில் ஒரு உயிர் சக்தி இருக்கிறது. அதுதான், அந்த உயிரணுவின் ஆத்ம சக்தி எனப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தின் உயிரணுக்களிலும் உள்ள உயிர் சக்திகள், தனது வாழ்நாளில், அவற்றிக்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி கொள்கின்றன. ஒரு உயிரணு இறக்கும்போது, அதிலிருக்கும் உயிர் சக்தியானது வெளியே வந்துவிடுகிறது. ஒரு உயிரினம் இறக்கும்போது, அதிலுள்ள உயிரணுக்கள் அனைத்திலும் உள்ள உயிர் சக்திகள், சக்தி இணைப்பு காரணமாக, மொத்தமாக உடலை விட்டு வெளியே வந்துவிடுகின்றன. அதேபோல, ஒரு மனிதன் இறக்கும்போதும், அவனது உயிரணுக்களிலுள்ள அனைத்து உயிர் சக்திகளும் உடலை விட்டு வெளியே வந்துவிடுகின்றன. பின்னர், அவற்றுக்கிடையேவுள்ள சக்தி இணைப்பின் மூலம், அந்த மனிதனது உருவத்திலேயே, கண்ணுக்கு தெரியாத ஆத்ம சக்தியாக உருவாகிவிடுகிறது. ஆகவே, ஒரு மனிதன் இறக்கும்போது, அவன் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களின் மொத்த உயிர் சக்தியே, ஆத்மன் அல்லது ஆத்மா சக்தி என்று அழைக்கப்படுகிறது. அதன் அளவு என்பது, கருப்பையில் இருந்ததை போன்று மைக்ரோமீட்டர் அளவு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உடலில், கண்ணுக்கு தெரியாத வகையில், அனைத்து உயிரணுக்களிலும் இருக்கும் அணுத்துகள் சக்திகள் (தலை முதல் பாதம் வரையில் இருக்கும்), மரணத்திற்கு பின்னர், வெளியே வந்து மனித ஆத்ம சக்தியை, மனித வடிவில், கண்ணுக்கு தெரியாத வகையில், உருவாக்குகிறது என்பதை பார்த்தோம். அதாவது உங்களது ஆத்ம சக்தி என்பது, கண்ணாடியில் தெரியும் உங்கள் உருவத்தை போலவே இருக்கும். ஆனால் அது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது. அது, உங்களது மனித வாழ்வின் ஞாபகங்களையும், திறன்களையும் கொண்டிக்கும். மனிதனுடைய ஆத்ம சக்தி என்பது, மனிதனுடைய இருதய பகுதியிலிருந்து வரும் ஒரு ஒளி என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு மனிதனுடைய உடலில் இருக்கும், அணுத்துகள் சக்திகள் (அணுக்கள்) கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், அவை ஒட்டுமொத்தமாக கண்ணுக்கு தெரிகின்ற வகையில் இருக்கிறது. ஆனால், ஒரு மனித ஆத்மாவில், சில லட்சம் அணுத்துகள்களே இருக்கும் என்பதால் அவை நம் கண்ணுக்கு தெரிவதில்லை.

ஒரு மனிதன் இறந்தவுடன், அவனது உடல் பாதுகாப்பாக புதைக்கப்படும்பட்சத்தில், அந்த மனித ஆத்மா மெதுவாக வளர்ச்சி பெறுகின்றது. அதேபோல, அவன் இறந்த பிறகு, அவனது உடல் எரிக்கப்படும்போது, மனித ஆத்மா துரிதமாக சிதறி விடுகின்றன. மனித ஆத்மா என்பது, மறுமை வாழ்வில் பிறந்த குழந்தையை போன்றே குறைந்த சக்தி கொண்டிருக்கும் என்பதால், கண்ணுக்கு தெரியாத சக்தி துகள்களோடு அவற்றுக்கிருக்கும் சக்தி இணைப்பு என்பது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும். ஒரு மனிதர் இறக்கும்போது, அவரது உறவினர்கள் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே சக்தியூட்டும் சடங்குகளை செய்வார்கள். தொடர்ச்சியான சடங்குகள் செய்யப்படாத நிலையிலும், வசிப்பதற்கு பாதுகாப்பான இடமில்லாத நிலையிலும், ஒரு மனித ஆத்மாவால், நீண்ட காலம் கண்ணுக்கு தெரியாத, மனித உருவிலுள்ள தனது ஆத்ம சக்தியை தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதோடு, பலத்த காற்று, மழை போன்ற இயற்கை சக்திகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதன் சக்தி துகள்கள் மெதுவாக சிதறிவிடுகின்றன. அதேசமயம், ஒரு மனித ஆத்மாவுக்கு, ஏற்கனவே உள்ள அழிவற்ற ஆத்மாக்களின் (தெய்வம் அல்லது பரமாத்மா) ஆதரவு கிடைக்கும்போதும், சக்தியூட்டும் சடங்குகள் செய்யப்படும்போதும், அவை கண்ணுக்கு தெரியாத, தனது மனித உருவத்தை சிதறாமல் தக்க வைத்து கொள்ள முடியும். தனது சக்திகளை சிதறாமல் தக்க வைத்து கொள்ள ஒரு மனித ஆத்மாவால் முடிகிறது என்றால் அந்நிலையே, முக்திநிலை, மோட்ச நிலை, மறுபிறப்பிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஆத்மா, மனித உருவிலுள்ள தனது கண்ணுக்கு தெரியாத சக்தி ரூபத்தை இழந்துவிடாமல், அந்த ரூபத்திலேயே, தனது மனித வாழ்வின் ஞாபகங்களோடும், திறன்களோடும் நிரந்தரமாக இருப்பதுதான் அழிவற்ற ஆத்மா என்பதற்கான பொருள். அத்தகைய அழிவற்ற மனித ஆத்மாவுக்கு, மனிதனாகவோ, விலங்கினமாகவோ அல்லது இதர ஜடப்பொருள்களாகவோ மறுபிறப்பு என்பதே இருக்காது.

அழிவற்ற மனித ஆத்மாக்களை மக்கள் தெய்வங்களாக வணங்குகின்றனர். அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள், தனது மனித வாழ்வின்போது தீய மனிதர்கள் (அசுரர்கள்) மற்றும் தீய ஆத்மாக்களை அழித்து பெற்ற வெற்றிகள் குறித்து புராண கதைகள் எடுத்துரைக்கின்றன. மேலும் அத்தகைய ஆத்மாக்கள், அணுத்துகள்களை கையாளும் முறைகள், மறுமை வாழ்வில் அணுத்துகள் சக்திகளை கிரகித்து கொண்டு தன்னை வலுப்படுத்தி கொள்ளும் முறைகள் போன்ற பல்வேறு இரகசியங்களையும் கற்று கொண்டன. அணுத்துகள்களை கையாளும் தெய்வங்களது திறன்களை எடுத்து காட்டும் வகையில்தான், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வீக பெயர்கள் அமைந்திருக்கும். உயர்நிலை தெய்வங்கள், காவல் தெய்வங்கள், கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள் என இருக்கும் பலவகைப்பட்ட தெய்வங்கள், பல்வேறு கோவில்களில் வசித்து வருகின்றன. தெய்வீக வரிசைக்கிரமத்தில் அவர்களது இடங்கள், அணுத்துகளை கையாளும் அவர்களது தனிப்பட்ட திறன்களில் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

அழிவற்ற ஆத்மாக்களின் மறுமை வாழ்வு குறித்து புரிந்து கொள்வதே, நாம் கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதன் நோக்கம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முன்னோர்கள் வழிபாடு, முன்னோர்களின் ஆத்மாக்களை சக்தியூட்டி அவர்களை நமது குல தெய்வங்களாக (குல தேவதைகள்) ஆக்கி கொள்வது எப்படி என்பது குறித்த விளக்கங்கள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. உங்களது ஆத்மாவும், அழிவற்ற ஆத்மாவாக மாறமுடியும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெய்வம் என்பது ஒன்றுதான் என்று நீங்கள் நம்பினால், உங்களது ஆத்மாவால் தெய்வீக ஆத்மா என்ற நிலைக்கு (முக்திநிலை) போக முடியாது. தெய்வங்கள் பலர் என்பதை நீங்கள் ஏற்று கொண்டால், உங்களது பகுதியிலுள்ள ஒரு தெய்வத்தின் மூலம், உங்கள் ஆத்மாவுக்கும் அழிவற்ற ஆத்மா அல்லது தெய்வீக ஆத்மா என்ற நிலை கிடைக்கும். ஒரே ஒரு தெய்வம்தான் இருக்கிறது என்றால், அவரால் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு முக்திநிலையை அருள முடியாது.

இப்பிரபஞ்சம் முழுவதும் எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்துள்ள அணுத்துகள்களை, சர்வ வல்லமை படைத்த தெய்வமாக சிலர் வணங்கி வருகின்றனர். அணுத்துகள் சக்தி, பிரபஞ்ச சக்தி, பிரம்மன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் அணுத்துகள்கள்தான், இப்பிரபஞ்சத்திலுள்ள விலங்குகள், மனிதர்கள், மனித ஆத்மாக்கள், பூமி, நட்சத்திரங்கள், கிரகங்கள், கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சுக்கள், அதிர்வுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் உருவாக்குகின்றன. ஆற்றல் என்பதை யாராலும் உருவாக்க முடியாது, அழிக்கவும் முடியாது. ஆகவே, அணுத்துகள்களையும் (அணுக்கள்) யாரும் படைக்க முடியாது. அவை தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டுள்ளன. அணுத்துகள்கள், எல்லாவற்றையும் படைக்கின்றன, எல்லாயிடங்களிலும் இருக்கின்றன, பல்வேறு ரூபங்களில் எந்தவிதமான செயல்களையும் செய்கின்றன. அவற்றின் பல்வேறு ரூபங்களுக்கு, பல்வேறு திறன்களும், அறிவும் இருக்கின்றன. மனிதர்கள் என்பவர்கள், அணுத்துகள் சக்திகளின் ஒரு தொகுப்பு (உயிரணுக்களிலுள்ள அணுக்கள்). மனித ரூபத்திலுள்ள அணுத்துகள் சக்திகள், இன்னொரு மனித குழந்தையை உருவாக்குகின்றது. இதைத்தான், சர்வ வல்லமை படைத்த தெய்வம் மனிதர்களை படைக்கிறது என்றும், எல்லாயிடங்களிலும் நிறைந்துள்ள அணுத்துகள்தான் தெய்வம் என்றும் மக்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர்.

ஆனால், உண்மையில், நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் குழந்தைகளை, உங்கள் குடும்பங்களை படைக்கின்றவர். உங்கள் ஆத்மாவுக்கு மறுமை வாழ்வில் எப்படி ஒரு வசதியான வாழ்வை தேடித்தருவது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களது ஆத்மா, அப்படியே துகள், துகள்களாக சிதறிவிடும். உங்கள் ஆத்மாவின் மறுமை வாழ்வை எப்படி வடிவமைப்பது? அழிவற்ற மனித ஆத்மாவாக எப்படி நீடித்திருப்பது? என்பது குறித்த விளக்கங்களை இந்நூல் வழங்குகின்றது.

கடந்த 3000 ஆண்டுகளாக, யார் உண்மையான தெய்வம்? என்பது குறித்து மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. சிலர், இயற்கையில் எங்கும், எதிலும் பரவியுள்ள அணுத்துகள் சக்திகளே சர்வ வல்லமை படைத்த தெய்வம் என்று கருதி வணங்கினர். வேறு சிலர், அழிவற்ற மனித ஆத்மாக்களை தெய்வமாக கருதி வணங்கினர். இப்பிரபஞ்சத்தையும், அதிலுள்ள சுதந்திரமாக மிதக்கும் அணுத்துகள் சக்திகளையும் சர்வ வல்லமை படைத்த தெய்வமாக வணங்கும்போது, மனித வாழ்வில் தற்போது நமக்குள்ள திறமைகளும், திறன்களும் அதிகரிக்கின்றன. அணுத்துகள் வழிபாடு என்பது லிங்க வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களையும், இயற்கையையும் (பூமி சக்தி) வணங்குவதால், நமக்குள்ள சிறப்பு திறன்கள் அதிகரிக்கின்றன. சாதுக்களின் ஆத்மாக்களை வணங்குவதால், அவர்களது குணங்களான அன்பு, கருணை ஆகியவை, அணுத்துகள் சக்திகளின் பிரதிபலிக்கும் திறன் காரணமாக, நமக்கும் வந்து விடுகின்றன. பல்வேறு தெய்வீக பெயர்களை கொண்ட அழிவற்ற ஆத்மாக்களை (தெய்வங்கள்) வணங்குவதன் விளைவாக, அவர்கள் மனித வாழ்வில் கொண்டிருந்த திறன்கள் மற்றும் அணுத்துகள்களை கையாளும் திறன்கள் ஆகியவற்றை நாமும் பெறமுடிகிறது. அத்திறன்கள், தெய்வங்களை போலவே நாமும் அழிவற்ற ஆத்மா நிலையை பெறுவதற்கு உதவுகிறது.

ஒரு மனித ஆத்மா, அழிவற்ற ஆத்ம நிலைக்கு உயர்ந்து விட்டால், அது தெய்வ நிலை என்று அழைக்கப்படுகிறது. அந்த நிலையை அடைந்ததற்கு பிறகு, அந்த ஆத்மாவால், அவதாரம், மறுபிறப்பு என்ற பெயரில் மீண்டும் இவ்வுலகில் பிறக்க முடியாது. மறுபிறவி என்பதன் பொருளை மனிதகுலம் உரிய முறையில் புரிந்து கொள்ளவில்லை. தங்களை போன்றே குணங்களையும், திறன்களையும் படைத்த ஒரு குழந்தையை நாம் பெறுவதற்கு தெய்வங்கள், நம்மை, ஆசிர்வதிக்கும்போது அதுதான் தெய்வங்களின் மறுபிறவி என்று குறிப்பிடப்படுகிறது. பல்வேறு தெய்வங்கள் மற்றும் அணுத்துகள் சக்திகளை வணங்கி எப்படி அத்தகைய அறிவுள்ள குழந்தைகளை பெற்று கொள்வது என்பது குறித்து இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Srichakra Gnaneswar Photo

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

இந்நூலின் ஆசிரியர் ஸ்ரீசக்ர ஞானேஸ்வர் (இயற்பெயர் செந்தில் குமார்), 1967-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதியன்று பிறந்தார். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பாடத்தில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், தனது 22 வயதில், சர்வதேச கடல்சார் அகாடமியை (Internatonal Maritme Academy) துவங்கினார். இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்வி நிறுவனம், கடற்பொறியியல் (Marine Engineering) மற்றும் கப்பல்தள மேலாண்மை (Nautical Cadet Officers) ஆகிய பிரிவுகளில் மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்வியை அளித்து வருகிறது. சர்வதேச கடல்சார் அகாடமி அறக்கட்டளையின் (சென்னை) நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் இருந்து வருகிறார்.

ஸ்ரீசக்ர தேவலோக கோவில் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ள இவர், இந்த அறக்கட்டளையின் சார்பில், சென்னை, புதுச்சத்திரத்தில், ஸ்ரீ வித்யா மகா கணபதிக்கு கோவில் கட்டியுள்ளார். இவர் ஆரம்பித்த இன்னொரு நிறுவனமான ஸ்ரீசக்ர மகாமேரு சேவா அறக்கட்டளை, ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இவர், HA Electronics (HK). Limited, Online Point Private Limited and SQ Consultancy Services Private Limited ஆகிய நிறுவனங்களின் இயக்குனராகவும் திறம்பட செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இவரது முகவரி: 33, இராமானுஜம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
அலைபேசி எண். +91-74182 48999
மின்னஞ்சல் முகவரி: contact@thetruedivinity.com

தெய்வீக பாதையில் அடைந்துள்ள வெற்றிகள்

ஸ்ரீசக்ர ஞானேஸ்வர் (செந்தில் குமார்), கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அக்னி ஹோமங்கள் (அக்னி சடங்குகள்) செய்து தனது தெய்வீக வாழ்க்கையை நடத்தி வருவதோடு, தனது வியாபார நிறுவனங்களையும், குடும்ப வாழ்வையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ‘சக்ரம்’ என்பது அணுத்துகள் சக்திகளின் சுழற்சி அல்லது நகர்வு என்று பொருள். அணுத்துகள் சக்திகள் என்பது (அணுக்கள்) எல்லாயிடங்களிலும், பல்வேறு ரூபங்களில் இருக்கின்றன. மனித உடல் மற்றும் இப்பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரும் அணுத்துகள் சக்திகள் பற்றிய தெய்வீக அறிவை பெறுவதற்கு உதவிடும் தெய்வீக சக்கரம்தான் ஸ்ரீ சக்கரம் (அல்லது ஸ்ரீ யந்திரம்).

ஸ்ரீசக்கரத்தை நாம் வணங்கும்போது, அழிவற்ற மனித ஆத்மாக்களின் (பல்வேறு தெய்வங்கள்) தெய்வீக வரிசைக்கிரமம் பற்றிய இரகசியங்களையும், அணுத்துகள் சக்திகளை கையாளும் அவர்களின் திறன்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அதேபோல, சிவலிங்க வழிபாட்டின் மூலம், நாம் பூமியின் பஞ்சபூத சக்திகள் (ந ம சி வா ய) போன்ற பல்வேறு அணுத்துகள் சக்தி அதிர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

‘பிரம்மா அல்லது பிரம்மன்’ என்றால் அணுத்துகள் சக்தி அல்லது பிரபஞ்சம் என்று பொருள். ‘வித்யா’ என்றால் திறன்கள். அணுத்துகள்களை கையாளும் திறன்தான் பிரம்ம வித்யா என்று அழைக்கப்படுகிறது. அணுத்துகள் சக்திகளின் இயல்புகள் மற்றும் திறன்கள் குறித்த அறிவை ‘பிரம்ம ஞானம்’ என்று கூறுகிறோம். முற்காலத்தில், முனிவர்களும், ரிஷிகளும், அக்னி மூலம் நடத்தப்படும் சடங்குகளின் (அக்னி ஹோமம்) மூலம், தொன்மையான உயர்நிலை தெய்வங்களை வணங்கி உயர்நிலை பேரறிவை பெற்றனர்.

ஸ்ரீசக்கர ஞானேஸ்வர் மிக உயர்ந்த அனுபவத்தை பெற்ற ஒரு தெய்வீக குரு. முற்காலத்தில், ரிஷிகள் செய்துள்ளவாறு, கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு தொன்மையான தெய்வங்களையும், அணுத்துகள் சக்திகளையும் அக்னி பூஜைகளின் (அக்னி சடங்குகள்) மூலம், வணங்கி வருகிறார். ஸ்ரீ சக்கரத்தை (அல்லது மகாமேரு) மகா ஷோடஷி மந்திரத்தின் மூலம் வணங்கி, பல்வேறு தெய்வங்களோடு தெய்வீக தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ள அவர், பஞ்சபூத மந்திரங்களை (ந ம சி வா ய) பயன்படுத்தி, சிவ லிங்கத்தை வணங்கி அதன் மூலம் அணுத்துகள் சக்திகளை கையாளுவதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார். ’ஞானம்’ என்பது அணுத்துகள் சக்திகள் மற்றும் அழிவற்ற மனித ஆத்மாக்கள் (தெய்வங்கள்) குறித்த அறிவை குறிக்கிறது. ‘ஈஸ்வரர்’ என்பது அணுத்துகள்களை கையாளுவதில் உள்ள திறன்களையும், அழிவற்ற வாழ்வுக்கு தேவையான சக்திகளை ஒரு மனித ஆத்மாவிற்கு ஊட்டுவதையும் குறிக்கிறது. ஸ்ரீசக்கர ஞானேஸ்வர் என்ற பட்டம், முக்திநிலை / மோட்சம் / விடுதலையை (அதாவது அழிவற்ற மனித ஆத்மா ஆவதற்கான நிலை) மனிதர்கள் பெறும் வகையில் அவர்களை வழிநடத்துவதில், அவருக்குள்ள தெய்வீக அறிவை (பிரம்ம ஞானம்) காட்டுகிறது.

ஸ்ரீசக்கர ஞானேஸ்வர் தனது புத்தகங்களின் மூலம், தான் பெற்ற உயர்நிலை பேரறிவை, இந்த மனித குலம் முழுவதும் பயனுறும் வகையில் பகிர்ந்து கொள்கிறார். அவர் பகிர்ந்து கொள்ளும் இந்த இரகசியங்கள் எல்லாம், கடந்த 3000 ஆண்டுகளாக யாராலும் சொல்லப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தெய்வீக அணுத்துகள் திறன்கள்

பல்வேறு மந்திர அதிர்வுகள், அக்னி சடங்குகள் ஆகியவற்றில் நன்கு பரிச்சயம் உள்ள ஸ்ரீசக்கர ஞானேஸ்வர், பல்வேறு திறன் பெற்ற தெய்வங்களோடு பக்தர்கள் தெய்வீக தொடர்பு கொள்வதற்கு வழிகாட்டி வருகிறார். பல்வேறு தெய்வங்களின் ஆசிர்வாதங்களை அவர் பெற்றுள்ளதால், தெய்வங்களது அணுத்துகள் ஆற்றல்கள், தெய்வீக வரிசைக்கிரமம், இஷ்ட தெய்வங்களின் அருளால் தெய்வீக நிலைக்கு உயரும் இரகசியங்கள் ஆகியவை குறித்து அவரால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. நமது மூளைக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து, மரணத்திற்கு பின்னர், அழிவற்ற நிலையில் வாழ்வதற்கேற்ப, நமது ஆத்மாக்களுக்கு சக்தியூட்டுவது எப்படி என்பது குறித்தும் அவர் வழிகாட்டி வருகிறார்.

ஒரு கோவில் அல்லது வழிபாட்டுத்தலத்தில், தெய்வீக ஆத்மாக்களோடு எப்படி மனித ஆத்மாக்களும் சேர்ந்து வாழ்வது என்ற இரகசியத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அணுத்துகள் சக்திகளின் பல்வேறு திறன்கள் குறித்து நன்கு அறிந்துள்ள அவர், ஜோதிடம், பெயரியல், எண் கணிதம், வாஸ்து, இராசிக் கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமானுஷ்ய அறிவியல் பற்றி தான் பெற்றுள்ள பேரறிவை இப்புத்தகத்தில் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். தீய சக்திகள் மற்றும் தாந்த்ரீக சக்திகள் ஆகியவை மனிதர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் குறித்து அவர் விளக்குவதோடு, அத்தகைய துஷ்ட தேவதைகளிடமிருந்து, இம்மை, மறுமை வாழ்வில் எப்படி நம்மை தற்காத்து கொள்வது என்பது குறித்தும் நமக்கு எடுத்துரைக்கிறார்.

தெய்வீக ஆராய்ச்சியும், புத்தகங்களும்:

ஸ்ரீசக்ர ஞானேஸ்வர், அணுத்துகள் சக்திகள் (அணுக்கள்) மற்றும் அழிவற்ற மனித ஆத்மாக்கள் (தெய்வங்கள்) குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு, மரணத்திற்கு பிறகு, மனித உடலிலிருந்து மனித ஆத்ம சக்தி உருவாக்கம் பெறுவது என்பது தன்னிச்சையான நிகழ்வு என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் சக்தி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அச்சக்திதான் அந்த உயிரணுவின் உயிர் சக்தி என அழைக்கப்படுகிறது. அந்த உயிர் சக்திகள், அவற்றிக்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி கொள்கின்றன. மனித உடலின் அனைத்து உயிரணுக்களிலும் உள்ள இந்த கண்ணுக்கு தெரியாத அணுத்துகள் சக்திகள், மரணத்திற்கு பின்னர் உடலை விட்டு வெளியே வந்து விடுகின்றன. பின்னர், இறந்த மனிதனுக்கு எப்படிப்பட்ட உருவம், அங்க லட்சணங்கள், உயரம் இருக்குமோ அதேமாதிரியான உருவத்தில், அவரது மனித ஆத்ம சக்தியை உருவாக்குகின்றன.

அப்படி புதிதாக உருவாகும் மனித ஆத்மாவுக்கு, ஒரு பிறந்த குழந்தைக்கு இருப்பது போன்று மிகக்குறைவான சக்திகளே இருக்கும். இறந்தவர்களுக்கு, அவர்களது உறவினர்கள் சில நாட்கள் மட்டுமே சடங்குகளை செய்வார்கள். உணவு சக்தி, தொடர்ச்சியாக கிடைக்காத நிலையில், ஒரு மனித ஆத்மாவால் தனது கண்ணுக்கு தெரியாத, மனித உருவிலான சக்தி ரூபத்தை, நீண்ட நாட்கள் சிதறாமல் வைத்து கொள்ள முடியாது. ஆகவே, அதன் சக்தி துகள்கள், காற்றில் மெதுவாக சிதறிவிடும். இதுதான் அந்த மனித ஆத்மாவின் மரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலான மனித ஆத்மாக்கள், இறந்த 3-6 மாதங்களுக்குள், இயற்கை சக்திகளால் பாதிப்புக்குள்ளாகி, காற்றில் சிதறிவிடுகின்றன. சில மனித ஆத்மாக்கள் மட்டும், வேறு சில அழிவற்ற மனித ஆத்மாக்களின் துணையாலும், சடங்குகள் மூலம் கிடைக்கும் சக்திகளாலும் சிதறாமல் தன்னை காத்துக் கொள்ளும். அப்படி ஒரு மனித ஆத்மாவால், சிதறுண்டு போகாமல், உறுதியாக தன்னை தக்க வைத்து கொள்ள முடிகிறது என்றால், அதுதான் முக்தி நிலை, மோட்ச நிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, பல ஆன்மீக தலைர்கள், மனித ஆத்மா துகள்களாக சிதறுண்டு போவதையே, முக்தி நிலை அல்லது விடுதலை நிலை என்று வாதிடுகின்றனர்.

மரணத்திற்கு பின்னர், தங்களது ஆத்மாக்கள் அமைதியாக உறங்கும் அல்லது தெய்வங்களோடு கலந்து விடும் அல்லது சொர்க்கத்தில் ஒரு இடம் கிடைக்கும் என்றெல்லாம் பலர் கற்பனை செய்து கொள்கின்றனர். கடந்த 3000 ஆயிரம் ஆண்டுகளாக, மறுமை வாழ்வில், மனித ஆத்மாக்களுக்கு என்ன ஏற்படுகிறது என்ற இரகசியங்களையோ அல்லது இந்த பூமியில், மறுமை வாழ்வு எவ்வளவு சவால்கள் நிறைந்தது என்பது பற்றியோ அல்லது மனித ஆத்மாவின் மரணம் என்று அழைக்கப்படும் அவர்களது ஆத்மாவின் சிதறல் குறித்தோ யாருமே எடுத்துரைத்ததில்லை.

மரணத்திற்கு பிந்தைய மறுமை வாழ்வில், ஒரு ஆத்மா முதலில் தனது ஆத்ம சக்தியை உறுதிப்படுத்தி கொண்டு, அழிவற்ற மனித ஆத்மா ஆவதற்கு வேண்டிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மறுமை வாழ்வில் சிதறிவிடாமல் உறுதியாக இருப்பதற்கு. உங்களது ஆத்மா, அணுத்துகள்களை கையாளும் பல்வேறு திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். அழிவற்ற மனித ஆத்மாவாக உயர்வதற்கு, ஒரு மனித ஆத்மாவிற்கு தேவைப்படும் பிரம்ம வித்யா மற்றும் பிரம்ம ஞானத்தை ஸ்ரீசக்ர ஞானேஸ்வர் தனது புத்தகங்கள் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார். உங்கள் பகுதியிலுள்ள பல்வேறு தெய்வங்களின் துணையோடு, உங்களது ஆத்மா எப்படி அழிவற்ற மனித ஆத்மாவாக மாறுவது என்ற இரகசியங்கள் குறித்தும், சுதந்திரமாக மிதக்கும் அணுத்துகள் சக்திகள் குறித்தும், சக்தியூட்டும் சடங்குகள் குறித்தும், இந்நூலாசிரியர் விஞ்ஞான அடிப்படையில் விளக்குகிறார். இந்த விளக்கங்களை படித்து ஒருவர் பெறும் உயர்நிலை பேரறிவு, அவரது ஆத்மாவை முக்தி நிலைக்கு அழைத்துச் செல்வதோடு, தெய்வீக ஆத்மாவாக உயர்வதற்கும் வழிவகுக்கிறது.

உண்மையான தெய்வீகம் தொகுப்புகள் (I-IV)

தொகுதி I <br> அத்தியாயங்கள் <b>(1-6)</b>

தொகுதி I
அத்தியாயங்கள் (1-6)

eBook

USD 25

தொகுதி II <br> அத்தியாயங்கள் <b>(7-15)</b>

தொகுதி II
அத்தியாயங்கள் (7-15)

தொகுதி III <br> அத்தியாயங்கள் <b>(16-25)</b>

தொகுதி III
அத்தியாயங்கள் (16-25)

தொகுதி IV <br> அத்தியாயங்கள் <b>(26-33)</b>

தொகுதி IV
அத்தியாயங்கள் (26-33)